சிங்கப்பூர் exclusive
வீட்டைப் புதுப்பித்தல் - சுகமா? சுமையா?
ஆனால் அந்தக் கனவை நனவாக்குவது சுகமா? அல்லது சுமையா? சிங்கப்பூரில் அதற்கான செலவு என்ன? அதனை எப்படிச் சமாளிப்பது? அதில் உள்ள சவால்கள் என்ன?
அனுபவங்களைச் "செய்தி"யிடம் பகிர்ந்தனர் சில இளம் தம்பதிகள்.
"எதிர்பாராமல் வந்த செலவுகளால் திக்குமுக்காடி விட்டேன்"
"சில வேலைகளை நேரடியாகக் செய்திருந்தால் செலவுகளைக் குறைத்திருக்கலாம்"
அடிப்படைச் செலவை முறையாகக் கணக்கிட்டுத் தயார்படுத்திக் கொள்வது அவசியம் என்று பெட்ரிக் சொன்னார்.
"முன்கூட்டியே திட்டமிட்டதால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடிந்தது"
"செலவுகளைக் கட்டுப்படுத்த விளக்குகள், கழிப்பறைக்கான சில பொருள்களை ஜொகூரில் இருந்து வாங்கிவந்தேன். இணையத்தில் ஆண்டு இறுதி விற்பனையின்போது சில பொருள்களை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தினேன்" என்றார் சைரெஷ்.
செலவுகளைச் சமாளிக்க என்ன செய்யலாம்?
"சேமித்து வைத்த பணம் கைகொடுத்தது"
"மற்ற செலவுகளை ஈடுகட்ட வங்கியில் சிறு கடனுதவிப் பெற்றேன்"
"வீட்டுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருள்களை மட்டும் முதலில் வாங்கினேன். மற்றப் பொருள்களை வீட்டுக்குக் குடிபுகுந்த பிறகு வாங்கினேன். குளிர்சாதனப் பெட்டி, விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றை வாங்க வங்கிக் கடனுதவி உதவியது" என்று கூறினார் சுனிதா.
"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார்" என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்துக்கு உண்டாகும் செலவைப் போன்ற வீட்டைக் கட்டவும் புதுப்பிக்கவும் பணம் தேவைப்படும். எனவே சரியான திட்டமிடல் அவசியம் என்பதை இவர்கள் சுட்டினர்.