புக்கிட் தீமா - Turf City பகுதியில் 20,000 புதிய வீடுகள்
வாசிப்புநேரம் -
படம்: Urban Redevelopment Authority
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புக்கிட் தீமா வட்டாரத்தின் Turf City பகுதியில் 20,000 புதிய தனியார் வீடுகளும் கழக வீடுகளும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் அவை கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குடியிருப்புப் பேட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
டௌன்டவுன் ரயில் பாதையின் சிக்ஸ்த் அவென்யூ நிலையமும் எதிர்காலத்தில் அமைக்கப்படவிருக்கும் குறுக்குத் தீவு ரயில் பாதையின் டர்ஃப் சிட்டி நிலையமும் இந்தப் பகுதிக்குச் சேவை வழங்கும்.
பெரும்பாலான வீடுகள் ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட நடக்கும் தூரத்துக்குள் அமைந்திருக்கும்.
பேருந்துச் சேவைகளும் சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
அங்குக் குடியேறுவோருக்குப் பல்வேறு வசதிகள் இருக்கும்.
கடைகள், அக்கம்பக்கப் பூங்காக்கள், விளையாட்டு, சுகாதார வசதிகள், பேருந்து முனையம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
பேட்டையில் சுமார் மூன்றில் ஒரு பகுதி பூங்காக்களுக்கும் பசுமை வெளிகளுக்கும் ஒதுக்கப்படும்.
பல்லுயிர்ச் சூழலை மெருகேற்றி, தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi