Skip to main content
மேல்முறையீடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மேல்முறையீடு - ஒரு விளக்கம்

வாசிப்புநேரம் -
மேல்முறையீடு - ஒரு விளக்கம்

(படம்: CNA)

சிங்கப்பூரில் எவரேனும் கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டிருந்தால் அவர் ஒருமுறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

தொடக்க விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்திருந்தால் அடுத்த முறை மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் (Pritam Singh) சிறப்புரிமைக் குழுவிடம் பொய் சொன்னதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை முன்னதாக உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முயன்றார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

விசாரணை நீதிபதி சட்டத்தில் ஏதும் தவறிழைத்திருக்கிறாரா என்பதில் மேல்முறையீடு கவனம் செலுத்தும்.

புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், வழக்கின் உண்மைகள் அப்படியே தொடரும்.

சிலவேளை மேல்முறையீட்டு மனு மீது ஒரே நாளில் தீர்ப்பளிக்கப்படலாம்.

அல்லது கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், மேலும் விவாதிக்கவும் வழக்கு ஒத்திவைக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்