Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீடுகளில் அடிக்கடி தீ... தவிர்ப்பது எப்படி?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பெரும்பகுதி மக்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கிறார்கள்.

அவ்வப்போது கழக புளோக்குகளில் ஏற்படும் தீச்சம்பவங்கள் குறித்துச் செய்தி வருகிறது.

தீச்சம்பவங்களைத் தவிர்க்க முடியுமா? எப்படி?
HDB mynicehome இணையத்தளம் பட்டியல் தருகிறது.
தனிநபர் நடமாட்டச் சாதனம் (PMD)

🔥 தனிநபர் நடமாட்டச் சாதனத்தை வைத்திருந்தால் அவற்றின் மின்கலன்களை இரவு முழுவதும் மின்னூட்டம் செய்வதைத் தவிர்க்கவும்.

🔥 சாதனம் மின்னூட்டம் செய்யப்படும்போது அதைக் கண்காணிக்கவேண்டும்.

🔥 மின்னூட்டம் செய்யப்படும் மின்கலனை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களுக்கு (காகிதம், துணி) அருகில் வைப்பதைத் தவிர்க்கவும்.

🔥 நிலப் போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்த, ஆணையத்திடம் பதிவுசெய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மட்டும் வாங்கவேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சாதனங்களை வாங்கும்போதும் அவை பதிவு செய்யப்பட்டவைதானா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சமையலறை அடுப்புகள்

🔥 சமைக்கும்போது சட்டி, பானைகள் வெகு விரைவில் தீப்பிடிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் சமைக்கும்போது சமையலறையை விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும்.

🔥 எண்ணெய் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய திரவங்களை அடுப்பிலிருந்து தள்ளி வைத்தால் தீ ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மின்சார இணைப்புக் கட்டமைப்பு

🔥
மின்சார இணைப்புக் கட்டமைப்பில் அதிக அளவில் மின்-சாதனங்கள் இணைக்கப்படும்போது தீ ஏற்படலாம்.

🔥 அதனால் இருக்கும் இணைப்புகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

🔥 சாதனங்களைப் பயன்படுத்தாதபோது மின்சாரத்தைத் துண்டிப்பது முக்கியம்.
ஊதுபத்தி, மெழுகுவர்த்திகள்

🔥 ஊதுபத்தி, மெழுகுவர்த்திகளைத் திரைச்சீலை அல்லது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். மரச்சட்டத்தில்கூடத் தீ பரவக்கூடும்.

சிகரெட் துண்டுகள்

🔥 பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டுகளைக் குப்பையில் வீசுவதைத் தவிர்க்கவும். புகை இல்லாமல் இருந்தாலும் உள்ளே சிறு நெருப்பு இருக்கலாம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்