Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயில் சேவைத் தடை- "வேலைக்குத் தாமதமாகச் சென்றாலும் முதலாளிகள் புரிந்துகொண்டனர்"

வாசிப்புநேரம் -

கிழக்கு-மேற்குப் பாதையில் ஏற்பட்ட ரயில் சேவைத் தடங்கல் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல், காலையில் பெய்த மழை இரண்டும் பயணிகளுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கியதாகச் 'செய்தி' நேயர் ரமேஷ் கூறியிருந்தார்.

"வழக்கமாகக் காலை மணி சுமார் 7.20க்கு வேலையிடத்திற்குச் சென்றுவிடுவேன். இன்று வழக்கத்திற்கு மாறாக 2 மணி நேரம் காலந்தாண்டி வேலைக்குப் போகவேண்டியிருந்தது. காலையில் மழையும் பெய்ததால் பயணம் சுமுகமாக இல்லை," என்று ரமேஷ் 'செய்தி'யிடம் கூறினார்.

இருந்தாலும் தமது முதலாளிகள் நிலைமையைப் புரிந்துகொண்டதாக ரமேஷ் தெரிவித்தார்.

எப்போதும் ரயிலில் பயணம் செய்யும் அவர் இன்று பேருந்தில் சென்றார்.

ஜூரோங் ஈஸ்ட்டிலும் பூன் லேயிலும் இதுவரை கண்டிராத அளவுக்குக் கூட்ட நெரிசல் இருந்ததாக ரமேஷ் கூறினார்.

அதே போன்ற கருத்தை நேயர் சிங்காரமும் முன்வைத்தார். தமது சக ஊழியர்களும் சிரமத்தை எதிர்நோக்கியதாக அவர் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

"எப்போதும் வேலைக்கு நேரத்திற்கு வரும் எனது நண்பர்கள் இன்று தாமதமாக வந்தடைந்தனர். பூன் லே ரயில் நிலையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலான அதிகாரிகள் பணியில் இருந்ததைப் பார்க்கமுடிந்தது" என்று அவர் சொன்னார்.

'செய்தி'யிடம் பேசிய மற்ற நேயர்கள் சிலரும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு தகுந்த ஏற்பாடுகள் செய்திருந்ததாகக் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்