Skip to main content
பொங்கலுக்கு உகந்த மண்பானையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பொங்கலுக்கு உகந்த மண்பானையை எப்படித் தேர்ந்தெடுப்பது?

வாசிப்புநேரம் -
பொங்கலுக்கு உகந்த மண்பானையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைக்கவே பலரும் விரும்புவார்கள்.

ஆனால் பொங்கல் வைக்க உகந்த மண்பானையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வியும் சிலருக்கு இருக்கலாம்.

அந்தக் கேள்வியோடு மலேசியாவின் ஜொகூர்பாருவிலுள்ள கடைத்தொகுதிக்குச் சென்றது செய்தி...

பொங்கல் விற்பனையில் ஈடுபட்டிருந்த மளிகைக்கடை ஊழியர் பிரவின் அதற்கான வழிமுறைகளை விளக்கினார்.

வழிமுறை # 1

✨பொங்கல் பானை கனமாக இருக்க வேண்டும்.
✨பானையைத் தட்டினால் கிண்ணத்தைத் தட்டுவது போன்ற ஓசை எழ வேண்டும்.
✨இத்தகைய பானைகளைத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
✨தீயில் நன்கு சுடப்பட்ட அத்தகைய பானைகள் சாக்லட் நிறத்தில் காணப்படும்.
✨வெள்ளை நிறப் பானைகளைக் கட்டாயம் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
 

Related article image
வழிமுறை # 2

✨பானைகளின் வாய்ப்பகுதியை காதில் வைத்து அதன் ஓசையைக் கேட்க வேண்டும். கடல் அலை போன்ற கனத்த ஓசை எழுந்தால் பானையில் விரிசல் இல்லை. அது பொங்கல் வைக்க உகந்த பானை என்று அறியலாம்.

✨விரிசல் விழுந்த பானையில் ஓசை மிகவும் சன்னமாகக் கேட்கும். அத்தகைய பானையை வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.

 
Related article image

வழிமுறை # 3

பானையில் நீரை நிரப்பிப் பார்க்க வேண்டும்.
✨பானையில் விரிசல் விழுந்தால் அதில் நீர் ஊடுருவிச் செல்வதைக் காண முடியும். அது பொங்கல் வைக்க உகந்தது அல்ல.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் சரியான பானையை உடனே வாங்கிவிடலாம்.

பானையின் அளவு, அதில் ஊற்றப்படும் பாலின் அளவு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் பொங்கலுக்கு ருசியைச் சேர்த்திடும்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்