Skip to main content
பொங்கல் பானையை எப்படிச் சுத்தம் செய்வது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பொங்கல் பானையை எப்படிச் சுத்தம் செய்வது?

வாசிப்புநேரம் -
பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானையைப் பயன்படுத்துவோர் அதிகம்.

களிமண்ணால் செய்யப்படும் பானை பொங்கலுக்குக் கூடுதல் சுவை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

பொங்கல் சமைப்பதற்குமுன் அந்தப் பானையை எப்படிச் சுத்தம் செய்வது?


1. பானையில் இருக்கும் தூசைத் துடைக்கவேண்டும்.

2. துருவிய தேங்காய்ப்பூவைப் பானைக்குள் போட்டுக் கிளறி எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதால் பானைக்குள் இருக்கும் தூசு எளிதாக வந்துவிடும்.

அல்லது.....

3. தேங்காய் நார் கொண்டு மெதுவாகத் தேய்த்துக் கழுவலாம்

4. கழுவிய பானையில் தண்ணீர் நிரப்பிச் சில மணிநேரம் ஊற வைக்கவும்

5. ஊறிய பானையை மீண்டும் ஒருமுறை நீரில் அலசி வெயிலில் உலர வைக்கவும்

6. பொங்கலுக்குப் பானை தயார்
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்