திடீர்ப் பள்ளம் எப்படி உருவாகிறது?
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தஞ்சோங் காத்தோங் ரோட்டில் இன்று (26 ஜூலை) திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது.
ஓர் அறையின் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறினர்.
திடீர்ப் பள்ளம் எப்படி உருவாகிறது?
மேற்பரப்பில் உள்ள நிலப் படிமத்தை மழைநீர் கரைக்கும்போது பள்ளம் ஏற்படுவதாக National Geographic சஞ்சிகை கூறுகிறது.
குறிப்பாக நிலத்தில் சுண்ணாம்புக்கல் இருக்கும்போது அதில் இருக்கும் விரிசல்களில் தண்ணீர் நாளடைவில் சேர்ந்துவிடுகிறது.
கல்லும் கரைந்துவிடுகிறது....ஒரு நாள் அது பெரும் துளையாக மாறிப் பள்ளமாகிவிடும்.
விரிசல்கள் மெல்ல மெல்ல விரிவடையும் என்பதால் பள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதில்லை.
சில சூழல்களில் பள்ளம் மேலும் விரைவாக உருவாகலாம் என்று சிங்கப்பூர்ப் பொறியாளர்கள் நிலையத்தின் உறுப்பினர் ஷேரன் இங் (Sharron Ng) சொன்னார்.
தண்ணீர்க் குழாய்கள் உடைந்துவிடும்போது...
தண்ணீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் குழாயோ, சாக்கடைக் குழாயோ உடையும்போது நீர் கசிந்துவிடுகிறது.
அதைச் சுற்றியுள்ள மணல் கரைந்துவிடும்... நாளடைவில் நிலத்தில் பலவீனம் ஏற்படலாம்.
கட்டுமானப் பணி...
கட்டுமானப் பணிகளில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும்போது நிலப் படிமங்களில் இடைவெளி ஏற்படுகிறது.
நீர் இருக்கவேண்டிய பகுதி காலியானதால் மேலே உள்ள நிலப் படிமங்கள் கீழே சரிந்துவிடுகின்றன.
அப்போது பள்ளம் மேலும் விரைவில் உருவாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Others