Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உருமாறும் COVID-19 கிருமி... தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது காரணமா?

தென்னாப்பிரிக்காவில் புதுவகை COVID-19 கிருமி கண்டறியப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் புதுவகை COVID-19 கிருமி கண்டறியப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்ட்டா வகைக் கிருமியைவிட அது எளிதில் பரவக்கூடியது என்று முதற்கட்ட ஆதாரங்கள் காட்டுகின்றன.

கிருமி எப்படி உருமாறுகிறது? தடுப்பூசிக்கும் கிருமி உருமாறுவதற்கும் தொடர்புண்டா?

அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளத் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் இந்துமதியை நாடியது 'செய்தி'...

உருமாறும் கிருமி வகைகள்

ஒவ்வொரு முறையும் கிருமி பெருகும்போது, அதன் மரபணு அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அதுதான் உருமாறிய கிருமி வகை என அழைக்கப்படுகிறது.

மனிதர்களிடையே கிருமி பரவும்போது, நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபருக்குள்ளும் கிருமி பல மடங்கு பெருகுகிறது.

தடுப்பூசிக்கும் கிருமியின் உருமாற்றத்திற்கும் தொடர்புண்டா?

நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் தடுப்பூசியின் நோக்கம்.

குறைவானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், கிருமி பெருகுவதும் குறைவாக இருக்கும். கிருமி உருமாறுவதும் குறையும்.

உருமாறிய கிருமி, தடுப்பூசியின் செயல்திறனைப் பாதிக்க வாய்ப்புகள் உண்டா?

தடுப்பூசி தாக்கக்கூடிய புரதம், உருமாறிய மரபணுவில் இருந்தால், தடுப்பூசியின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.

ஏன் ஒரு சில நாடுகளில் மட்டும் உருமாறிய கிருமி வகைகள் கண்டறியப்படுகின்றன?

தடுப்பூசி விகிதம் குறைவாக இருக்கக்கூடிய நாடுகளில் கிருமி உருமாற அதிக வாய்ப்புகள் உண்டு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்