Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

இளையர்கள் தொடக்கக் கல்லூரிகளுக்கு வரவிருக்கும் மாற்றங்களை எப்படிப் பார்க்கின்றனர்?

வாசிப்புநேரம் -
பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வுக்கான தற்போதைய பாடத் திட்டத்திலும் சுயேச்சைப் பல்கலைக்கழக அனுமதியிலும் அரசாங்கம் அறிமுகப்படுத்திய மாற்றங்கள் குறித்து இளையர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்தது 'செய்தி'.

மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனையைத் தூண்டவும் மதிப்பெண்கள் மீது உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்கவும் அரசாங்கம் சில மாற்றங்களை அடுத்த ஆண்டு முதற்கொண்டு நடப்புக்குக் கொண்டுவரும் எனக் கல்வியமைச்சர் சான் சுங் சிங் இன்று (1 மார்ச்) நாடாளுமன்றத்தில் கூறினார்.

"ஒரு பாடத்தில் நாம் கற்றுக்கொண்டதை எடைபோடுவது கடினமாகிறது"

"அரையாண்டுத் தேர்வை நீக்கும்போது ஒரு பாடத்தில் நாம் கற்றுக்கொண்டதை எடைபோடுவது கடினமாகிறது. நமக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறதா இல்லையா என ஆராய முடியாமல் போகலாம். ஆனால் மாணவர்களது மனநலனைக் கருத்தில் கொள்ளும்போது, அதை நீக்குவது நல்ல முடிவாகத்தான் தோன்றுகிறது," என்றார் தொடக்கக் கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா.

"கடந்த ஆண்டு Project Work எனப்படும் ஒப்படைப்புத் திட்டத்தைச் செய்தபோது அது எனக்குச் சிறிதளவு மன உளைச்சலைக் கொடுத்தது. அதனை எதிர்காலத்தில் தேர்ச்சி அல்லது தோல்வி என்னும் முறையில் மதிப்பிடுவதை நான் வரவேற்கிறேன்," என்று அவர் சொன்னார்.

மதிப்பெண்கள் மீது வைத்திருக்கும் முக்கியத்துவம் திசை திரும்புவது நல்லது என்றபோதிலும் சிங்கப்பூரில் போட்டித்தன்மைமிக்க சூழல் தணியாது என்று ஐஸ்வர்யா கவலையுடன் தெரிவித்தார்.

"மாணவர்களிடையே மன உளைச்சலைக் குறைக்கலாம்"

அரசாங்கம் அறிமுகப்படுத்திய மாற்றங்கள் மாணவர்களிடையே மன உளைச்சலைக் குறைப்பதோடு மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்தமானவற்றில் அதிக நேரம் செலவிடத் துணைபுரியும் என்றார் MDIS தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிட்டாள். 

"மதிப்பெண்களுக்காகவே படிப்பதை விட்டுவிட்டு இனி உற்சாகத்துடன் படிக்கலாம்"

"ஒரு பாடத்தை மதிப்பெண்களுக்காகவே படிப்பதை விட்டுவிட்டு இனி உற்சாகத்துடன் படிக்கலாம். எதிர்காலத்தில் தொடக்கக் கல்லூரியில் படிக்க விருப்பப்படுகிறேன். இந்த மாற்றங்களினால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு," என்றார் உயர்நிலை 2ஆம் வகுப்பில் படிக்கும் அஷ்வின்.

கல்வி அமைச்சு தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய மாற்றங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இளையர்கள் பொதுவாக அவற்றை வரவேற்கின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்