நிப்பா வைரஸ் - எப்படிப் பரவும்?
நிப்பா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் எப்படிப் பரவும்? தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.
வைரஸ் பரவ முக்கிய காரணமாக இருப்பது பழ வௌவால் (fruit bat).
இந்த வௌவாலின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர் ஆகியவை பன்றி, பழங்கள், பனைமரம் ஆகியவற்றுக்குப் பரவுகின்றன.
வைரஸ் தொற்றிய பன்றி, பழம், பனைமரப் பானம் வழியாக இது மனிதர்களுக்குப் பரவுகிறது.
பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்?
📌 திடீர்ச் சளி, காய்ச்சல், தலைவலி
📌 தொண்டை வலி
📌 தசை வலி
📌 வாந்தி
📌 மயக்கம்
📌 தலைசுற்றல்
நிமோனியா (pneumonia) நோய்த்தொற்றும் மூச்சுப்பிரச்சினைகளும் ஏற்படலாம்.
அவற்றுள் மிகக் கடுமையான பிரச்சினை மூளை வீக்கம் (encephalitis) ஆகும்.
ஆரம்பக் கட்ட நோய் தொடங்கியபிறகு 3 முதல் 21 நாள்களில் மூளை வீக்கம் ஏற்படக்கூடும் என்று பிரிட்டன் ஆய்வு கூறுகிறது.
சிலருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படலாம்.