சிங்கப்பூர் exclusive
எரிவாயுக் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது?
படம்: Envato
This audio is generated by an AI tool.
மத்திய கிழக்கில் எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியில் பெரும் இடையூறுகள்...
மின்சாரம், எரிவாயு (Gas) கட்டணங்கள் உயர்ந்துள்ளன...இன்னும் உயரவிருக்கின்றன.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட்டிற்கு (kWh) 0.24 காசு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் எந்த நிறுவனங்கள் எரிவாயு வழங்குகின்றன?
🛢️சிங்கப்பூரின் வீடுகளில் நகர எரிவாயு (Town Gas) அல்லது LPG எனும் திரவ எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
🛢️City Energy நிறுவனம் நகர எரிவாயுவைச் சிங்கப்பூர் வீடுகளுக்கு வழங்குகிறது.
🛢️LPG எனும் திரவ எரிவாயுவை Union Gas, SingGas போன்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் வழங்குகின்றன.
🛢️அவை இரண்டுக்கும் வெவ்வேறு விலை நிர்ணய முறைகள் உள்ளன.
எரிவாயுக் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது?
City Energy நிறுவனம்:
💲ஒரு கிலோவாட்டிற்கு 21.68 காசாக இருந்த அது இப்போது 21.92 காசுக்கு உயர்ந்துள்ளது.
💲இது 9% பொருள் சேவை வரிக்கு முன்.
💲️ஏப்ரல்-ஜூன் வரையிலான கட்டணம் ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரையிலான எரிபொருள் விலைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு விலையில் பெரிய மாற்றமில்லை.
💲️அடுத்தடுத்த மாதங்களில் திரவ எரிவாயுக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று City Energy கூறியது.
திரவ எரிவாயு நிறுவனங்கள்:
💲️Union Gas, SingGas, Esso LPG நிறுவனங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 12.7 கிலோ எரிவாயுக் கலனுக்கு 38 வெள்ளி வசூலிக்கின்றன.
💲மார்ச் முதல் வாரத்தில் 12.7 கிலோ எரிவாயுக் கலனுக்கு 35 வெள்ளி வசூலித்தன Union Gas, SingGas நிறுவனங்கள்.
💲கட்டணம் இப்போதைக்கு $3 அதிகரித்துள்ளது.
வரும் நாள்களில் நிலைமையைப் பொறுத்து விலை கூடலாம், சற்று குறையலாம் என்று நிறுவனங்கள் சொல்கின்றன.