காரில் மின்-சிகரெட் - உட்லண்ட்ஸில் ஆடவர் கைது
வாசிப்புநேரம் -
படம்: Immigration & Checkpoints Authority, Singapore.
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இட்டோமிடேட் (etomidate) எனும் ரசாயனம் கலந்த மின்-சிகரெட்டுகளை இறக்குமதி செய்ததாக 24 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இம்மாதம் 2ஆம் தேதி ஷேக் ஒமார் பின் முகமது இஸ்மாயில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஜூன் 30ஆம் தேதி அவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டார். அவருடைய காரில் 2 மின்-சிகரெட்டுகளும் 100 மின்-சிகரெட் கலன்களும் இருந்தன.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அங்கும் 2 மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை அனைத்திலும் இட்டோமிடேட் கலந்திருந்தது சோதனையில் தெரிந்தது.
வழக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi