Skip to main content
வேனில் 80 மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேனில் 80 மின்-சிகரெட் கலன்கள் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
வேனில் 80 மின்-சிகரெட் கலன்கள் - ஆடவர் மீது குற்றச்சாட்டு
படம்: HSA
மின்-சிகரெட் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது சுகாதார அறிவியல் ஆணையம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அவர் 30 வயது இயோ ஸி சியாங் (Yeo Zhi Xiang).

நேற்று முன்தினம் (2 பிப்ரவரி) வாம்போ வெஸ்ட் (Whompoa West) கார் நிறுத்தத்தில் இயோ உள்ளிட்ட மூன்று ஆடவர்கள் இடையே சண்டை நடந்தது.

அதை விசாரிக்கக் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு இயோ மற்றோர் ஆடவரை நோக்கிக் கத்தியை நீட்டினார்.

ஒருவர் இயோவிடமிருந்து மின்-சிகரெட் கலன்களை வாங்க முயன்றபோது தகராறு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகள் மூவரையும் தடுப்புக்காவலில் வைத்தனர்.

இயோவின் வேனில் 80 மின்-சிகரெட் கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை நடத்தியது.

பிடிபட்ட கலன்களில் எட்டோமிடேட் ரசாயனம் கலந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

இயோவிடம் விசாரணை தொடர்கிறது; மற்ற இரண்டு ஆடவர்கள் தனியாக விசாரிக்கப்படுகின்றனர்.

வழக்கு மார்ச் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்