Skip to main content
இரவு நேரக் கேளிக்கைக் கூடத்தில் சட்டவிரோத மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இரவு நேரக் கேளிக்கைக் கூடத்தில் சட்டவிரோத மின்-சிகரெட் விற்பனை

வாசிப்புநேரம் -
இரவு நேரக் கேளிக்கை விடுதியில் சட்டவிரோத மின்-சிகரெட் விற்பனையைச் சுகாதார அறிவியல் ஆணையம் முறியடித்துள்ளது.

கோல்மன் ஸ்ட்ரீட்டில் (Coleman Street) இருக்கும் Excelsior கடைத்தொகுதியில் உள்ள Club Sim இரவு நேரக் கேளிக்கை விடுதியில் கடந்த மாதம் 15ஆம் தேதி அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

ஊழியர்களுக்கு விடுதியின் மேலாளர் மின்- சிகரெட்டுகள் விற்பதாக அப்போது தெரியவந்தது.

மேலாளரின் வாகனத்தையும் வீட்டையும் சோதித்ததில் அவருக்கும் மின்-சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக விநியோகிக்கும் குழு ஒன்றுக்கும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் அறிந்தனர்.

மேல் விசாரணையில் மேலாளர் உதவி வருவதாக ஆணையம் கூறியது.

மின் சிகரெட்டுகள் அல்லது அதன் பாகங்களை வைத்திருந்த மேலும் ஐந்து பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகளை வாங்குவது, வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மின் சிகரெட் இறக்குமதி,விநியோகம், விற்பனை ஆகியவையும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள்.

முதன்முறை குற்றம் புரிவோருக்கு 10,000 வெள்ளிவரை அபராதம், 6 மாதம்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அடுத்தடுத்துக் குற்றம் புரிவோருக்கு 20,000 வெள்ளிவரை அபராதம், 12 மாதம்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்