Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து மின்னிலக்கமயமாவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்துத் துறை, தொடர்ந்து மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து மின்னிலக்கமயமாவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரின் ஆகாயப் போக்குவரத்துத் துறை, தொடர்ந்து மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக அளவில் அந்தத் துறை, COVID-19 நோய்ப்பரவல் காலத்துக்குப் பிறகு கணிசமாக உருமாற்றம் காணும் நிலையில், அத்தகைய முயற்சிகளைத் தொடரவேண்டும் என்றார் அவர்.

நோய்ப்பரவல் சூழலில் இருந்து அந்தத் துறை மீண்டுவருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் திரு. ஹெங் கூறினார்.

SIA-NUS மின்னிலக்க ஆகாயப் போக்குவரத்து நிறுவன ஆய்வுக்கூடத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் அதுபற்றிப் பேசினார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனச் சிப்பந்திகளின் செயல்முறைகள், சேவைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை ஆய்வுக்கூடம் உருவாக்கும்.

ஆய்வுப் பணிகளில் மற்ற நிறுவனங்கள் கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த ஆய்வுக்கூடம் முனையும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்