Skip to main content
நடிகரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நடிகரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து - தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவார்

வாசிப்புநேரம் -
நடிகரின் நிரந்தரவாசத் தகுதி ரத்து - தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவார்
(கோப்புப் படம்: 8world)
வெளியீடு : 05 Feb 2026 04:10PM புதுப்பிப்பு : 05 Feb 2026 05:10PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

முன்னாள் உள்ளூர் நடிகர் இயன் ஃபாங்கின் (Ian Fang) நிரந்தரவாசத் தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர் நாடு கடத்தப்படுவார் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

சீனாவைச் சேர்ந்த ஃபாங் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் புரிந்த நிரந்தரவாசிகளின் தகுதி மறுஆய்வு செய்யப்படும் என்று ஆணையம் கூறியது.

சென்ற ஆண்டு (2025) மே மாதம் ஃபாங்கிற்குப் பாலியல் குற்றங்களுக்காக 40 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் 15 வயதுப் பெண்ணுடன் பாலியல் உறவுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு 34 வயது.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் சிறைத்தண்டனையைத் தொடங்குவதற்கு முன் ஃபாங் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

தனது குற்றங்களுக்குப் பொறுப்பேற்பதாகவும் அவர் கூறினார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்