Skip to main content
மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மின்-சிகரெட் தொடர்பில் 57 சம்பவங்கள் - பிடிபட்டவர்கள் யார் யார்?

வாசிப்புநேரம் -
மின்-சிகரெட் தொடர்பில் 57 சம்பவங்கள் - பிடிபட்டவர்கள் யார் யார்?

படம்: Facebook/Immigration & Checkpoints Authority

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மின்-சிகரெட்டுக்கு எதிராகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நடத்தும் சோதனைகள் தீவிரமடைகின்றன.

ஜனவரி 5ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடையே மின்-சிகரெட் தொடர்பில் 57 சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

சிலர் மின்-சிகரெட்டுடன் பிடிபட்டனர்; சிலர் அவற்றை அப்புறப்படுத்த முன்வந்தனர்.

சம்பந்தப்பட்டவர்களில் சுமார் 67 விழுக்காட்டினர் குறுகியகால வருகை அனுமதி பெற்றவர்கள்.

மற்றவர்கள் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் அல்லது நீண்டகால அனுமதி பெற்றவர்கள்.

மின்-சிகரெட், அது தொடர்பான பாகங்கள் என்று மொத்தம் 340க்கும் மேற்பட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆணையம் அந்தத் தகவல்களை அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டது.

மின்-சிகரெட் வைத்திருப்போர், வாங்குவோர் அல்லது பயன்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவரும் உள்ளூர்ச் சட்டங்களை மதித்து நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்