Skip to main content
வீட்டு முகவரிகளை மாற்றும் ICA இணையச் சேவையில் 99 முறை முறைகேடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டு முகவரிகளை மாற்றும் ICA இணையச் சேவையில் 99 முறை முறைகேடு

வாசிப்புநேரம் -

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் வீட்டு முகவரிகளை மாற்றும் அதன் இணையச்சேவையில் 99 முறை முறைகேடு நடந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது.

அதில் 71 முறை வெற்றிகரமாக முகவரியை மாற்ற முடிந்திருக்கிறது.

உள்துறை துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) நாடாளுமன்றத்தில் அது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

சென்ற மாதம் 11ஆம் தேதி, முகவரி மாற்றும் சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்வதாய் ஆணையம் அறிவித்திருந்தது.

திருடப்பட்ட Singpass தரவுகளைக் கொண்டு வீட்டு முகவரிகளை மாற்ற 80 முறை முயற்சிகள் எடுக்கப்பட்டதை ஆணையம் கண்டறிந்தது.

அதில் 75 விழுக்காட்டு முயற்சிகள் வெற்றியடைந்ததாக ஆணையம் அப்போது கூறியிருந்தது.

இணையச் சேவையைப் பயன்படுத்தி முகவரியை மாற்ற சிரமப்படுவோருக்கு உதவும் நோக்கத்தில், பிரதிநிதியைக் கொண்டு அதை மாற்றும் அம்சம் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. அதனைப் பயன்படுத்தி முறைகேடு நடந்தது.

பாதிக்கப்பட்ட 99 பேரையும் ஆணையம் தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டு முகவரி சரிபார்க்கப்பட்டுவிட்டதாகவும் திருவாட்டி சுன் சொன்னார். அவர்களின் அடையாள அட்டைகளும் மாற்றப்பட்டுள்ளன.

முறைகேடுகள் தொடராமல் இருக்க அவர்களின் Singpass கணக்குகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டன.


அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் திருவாட்டி சுன் சொன்னார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்