Skip to main content
ICA சேவைகள் நிலையம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ICA சேவைகள் நிலையம் இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) சேவைகள் நிலையம் இன்று அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியது.

அதனை உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா சண்முகம் திறந்துவைத்தார்.

அது குறித்து ஆணையம் இன்று Facebookஇல் பதிவிட்டது.

"2025 குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு ஒரு முக்கிய ஆண்டாக அமைந்துள்ளது. உலகிலேயே முதன்முதலாகக் கடப்பிதழ் இல்லாமல் குடிநுழைவுச் சோதனையை முடிக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றும். New Clearance Concept திட்டத்தின்கீழ் தானியக்கக் குடிநுழைவுச் சோதனை முறை அனைத்துப் பயணிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் Services Centre Next Generation (SCNG) திட்டத்தின் ஒரு பகுதியாக குடிநுழைவு, பதிவு வசதிகளின் சேவையை உருமாற்றம் செய்துள்ளோம்," என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்