Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையம்வழி வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிக நிறுத்தம்: ICA

வாசிப்புநேரம் -
இணையம்வழி வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிக நிறுத்தம்: ICA

(படம்: CNA/Tang See Kit)

சிங்கப்பூரர்கள் இணையம்வழி வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக்
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தச் சேவையைப் பயன்படுத்தி அனுமதியின்றி முகவரியை மாற்ற முயற்சி செய்த 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

களவாடப்பட்ட Singpass கணக்குத் தகவல்களை வைத்து சில பொறுப்பற்றவர்கள் அவ்வாறு செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்வழி அவர்கள் போலிக் கணக்குகளைத் தயார் செய்து அதனை மோசடிக்கும் இதர குற்றச்செயல்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்று காலையிலிருந்து eCOA எனும் இணையம்வழி வீட்டு முகவரியை மாற்றும் சேவையை ஆணையம் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது.

அந்தச் சேவையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்றது ஆணையம்.

அடுத்த 2 நாள்களில் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி சேவையை மீண்டும் தொடங்க ஆணையம் விரும்புகிறது.

அந்த இணையவழிச் சேவை 2020ஆம் ஆண்டு முதல்முறையாக சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

சிங்கப்பூரர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் தங்களது வீட்டு முகவரி மாற்றத்தைத் தெரியப்படுத்த அந்தச் சேவை உதவியது.

அதன் கீழ் மொத்தம் 3 தெரிவுகள் உள்ளன.

1. Myself
2. Myself and my family members
3. Others

Others என்ற தெரிவு, இணையத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் மற்றவர்களின் உதவியுடன் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தெரிவு.

ஆனால் அதனைப் பயன்படுத்திச் சில பொறுப்பற்றவர்கள் வீட்டு முகவரிகளை மாற்ற முயற்சிசெய்தது அம்பலமாகியிருக்கிறது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்