Skip to main content
IHH Healthcare நிறுவனத்தில் 300க்கு அதிகமானோர் ஆட்குறைப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

IHH Healthcare நிறுவனத்தில் 300க்கு அதிகமானோர் ஆட்குறைப்பு

வாசிப்புநேரம் -
IHH Healthcare நிறுவனத்தில் 300க்கு அதிகமானோர் ஆட்குறைப்பு

படம்: Reuters/ Yantoultra Ngui

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

IHH Healthcare நிறுவனம் சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா ஆகியவற்றில் 300க்கும் அதிகமான ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்கிறது.

ஆசியாவின் ஆகப் பெரிய தனியார் மருத்துவமனை நிறுவனங்களில் அதுவும் ஒன்று.

நிறுவனத்தின் 76,000 ஊழியர்களில் சுமார் 0.5 விழுக்காட்டினர் ஆட்குறைப்புச் செய்யப்படுகின்றனர்.

வர்த்தக ஆதரவுச் சேவைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த மாற்றம் இடம்பெறுகிறது.

சில ஊழியர்கள் மாற்றியமைக்கப்பட்ட வேலைப் பொறுப்புகளுக்கு மாறுவர்.

IHH Healthcare நிறுவனம் 10 நாடுகளில் 190 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களை நடத்துகிறது.

சிங்கப்பூரில் Gleneagles, Mount Elizabeth, Mount Elizabeth Novena, Parkway East ஆகிய நான்கு மருத்துவமனைகளும் அதன்கீழ் செயல்படுகின்றன.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்