Skip to main content
பூண்டு தட்டும் கருவிகளை மீட்டுக்கொண்டது Ikea
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பூண்டு தட்டும் கருவிகளை மீட்டுக்கொண்டது Ikea

வாசிப்புநேரம் -
பூண்டு அழுத்தும் கருவிகளை மீட்டுக்கொள்வதாக Ikea நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதைப் பயன்படுத்தும்போது சிறிய பகுதிகள் கழன்றுவரும் ஆபத்து இருப்பதாக அது கூறியது.

விசாரணையின்போது அந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட பொருள்...

365+ Vardefull garlic press (கறுப்பு நிறம்)

பொருள் எண்: 601.636.02.

'2411' முதல் '2522' வரையிலான தேதி கொண்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் அது தொடர்பான எந்தச் சம்பவம் குறித்தும் தகவல் பெறவில்லை என்றது Ikea.

எனினும் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் யாரும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அது கேட்டுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட பொருள்களை எந்த Ikea கடைகளில் வேண்டுமானாலும் திருப்பிக் கொடுக்கலாம்.

அதற்கான பணம் முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்