Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட வாணவேடிக்கைகள் - பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் பறிமுதல்

வாசிப்புநேரம் -
சட்டவிரோதமாகச் சுமார் 1,000 பெட்டிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த வாணவேடிக்கைகள் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவை இருந்த கொள்கலனில் பொதுவான பொருள்கள் இருப்பதாக அவற்றை அனுப்பிய சீனாவைச் சேர்ந்தவர் கூறியிருந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் காவல்துறையும் தெரிவித்தன.

அந்தக் கொள்கலன் சிங்கப்பூர் வழியாக ஏமனுக்குச் சென்றுகொண்டிருந்தது.

பிளாஸ்டிக் குவளைகள் இருந்த 130 பெட்டிகளுக்கு இடையே வாணவேடிக்கைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலைக் கொண்டு இம்மாதம் 6ஆம் தேதி அவை கண்டுபிடிக்கப்பட்டன.

உரிமமின்றி வெடிபொருள்களை இறக்குமதி செய்வோருக்கு அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை சொன்னது.
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்