சட்டவிரோதச் சூதாட்டம் - 6 பேர் கைது
This audio is generated by an AI tool.
காவல்துறை, சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 6 பேர் பிடிபட்டனர்.
பூன் லே அவென்யூ (Boon Lay Avenue), தெங்கா டிரைவ் (Tengah Drive), பாண்டான் கார்டன்ஸ் (Pandan Gardens) உள்ளிட்ட தீவின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 15ஆம் தேதி சோதனைகள் நடத்தப்பட்டன.
பிடிபட்டவர்கள் 32க்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் ஐவர் ஆண்கள். ஒருவர் பெண்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சட்டவிரோதக் குதிரைப் பந்தய, அதிர்ஷ்டக் குலுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 70,000 வெள்ளி மதிப்புள்ள ரொக்கமும் மின்னியல் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை சொல்லிற்று.
சட்டவிரோதச் சூதாட்டத்தை நடத்திய குற்றத்திற்கு 7 ஆண்டு வரை சிறையும் 500,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் பங்கெடுத்த குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறையும் 10,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.