Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவலைக் கொண்டு சட்டவிரோதமாக Prepaid சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்ததாகச் சந்தேகம் - ஐவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

சட்டவிரோதமாகப் பெற்ற தனிநபர் தகவலைக் கொண்டு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் Prepaid சிம் அட்டைகளுக்கு பதிவுசெய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிக் கடைகளில் பணிபுரிந்த அவர்கள் 460க்கும் அதிகமான Prepaid சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்களில் மூவர் சிங்கப்பூரர்கள்; ஒருவர் பங்களாதேஷ்காரர்; எஞ்சிய ஒருவர் மியன்மாரைச் சேர்ந்தவர்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பொதுவாக சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்ய தனிநபர் தகவலைக் கொடுப்பதுண்டு.

அத்தகவலைக் கொண்டு சந்தேக நபர்கள் மேலும் சில சிம் அட்டைகளுக்கு முன் அனுமதி ஏதுமில்லாமல் பதிவுசெய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தனிநபர் ஒருவரின் முகவரியைக் கொண்டு மூன்றுமுறை வரையில் Prepaid சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்ய அனுமதி உண்டு.

பொதுமக்களின் தனிநபர் தகவலைத் தவறாகப் பயன்படுத்தும் கைத்தொலைபேசிக் கடை ஊழியர்களைக் கடுமையாகக் கண்டிப்பதாகக் காவல்துறையினர் கூறினர்.

உரிமமின்றிக் கடன்கொடுத்தல், மோசடிகள் போன்றவற்றுக்கு நபர்கள் வழிவகுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட Prepaid சிம் அட்டைகளை வாங்கவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்