Skip to main content
சட்டவிரோதமாகப் படகில் எண்ணெய் ஏற்றியதாக 18 பேர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சட்டவிரோதமாகப் படகில் எண்ணெய் ஏற்றியதாக 18 பேர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சட்டவிரோதமாகக் கடலில் உள்ள கப்பலில் எண்ணெய் ஏற்றியதாகச் சந்தேகிக்கப்படும் 18 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 21 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

நேற்று அதிகாலை சுமார் 12.45 மணிக்குச் சிங்கப்பூர் கரைக்கு அப்பால் அவர்களை இரு படகுகளிலிருந்து கடலோரக் காவல்படை கைது செய்தது.

அந்த இரு படகுகளும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டவை.

அவர்கள் நிறுவனத்திற்குத் தெரியாமல் அந்த எண்ணெய்யைக் கையாடல் செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த எண்ணெயின் மதிப்பு சுமார் 13,600 வெள்ளி.

சந்தேக நபர்கள் எண்ணெய்யை விற்றுப் பணத்தைச் சொந்தத் தேவைக்காக எடுத்துக்கொள்ள நினைத்ததாகக் காவல்துறை சொன்னது.

அவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்