Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் 2023இன் வளர்ச்சி முன்னுரைப்பு கீழ்நோக்கித் திருத்தப்பட்டுள்ளது..

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கான இவ்வாண்டின் வளர்ச்சி முன்னுரைப்பை அனைத்துலகப் பண நிதியம் கீழ்நோக்கித் திருத்தியுள்ளது.

சீனாவின் பொருளியல் மீண்டும் முழுவீச்சில் திறந்துள்ளது பல நன்மைகளை அளிக்கலாம்.

எனினும், அனைத்துலகப் பொருளியல் வளர்ச்சியின் மந்தநிலை அதை மட்டுப்படுத்தக்கூடும் என்று பண நிதியம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூரின் வளர்ச்சி 2 புள்ளி 3 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.

தற்போது அது ஒன்றரை விழுக்காடாகக் கீழ்நோக்கித் திருத்தப்பட்டுள்ளது.

நிதியத்தின் கணிப்புப்படி பொருள், சேவை வரியின் உயர்வு காரணமாக சிங்கப்பூர் இவ்வாண்டு அதிக பணவீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.

எனினும், வர்த்தக நடுவமாக விளங்கும் சிங்கப்பூர் அதிகமான முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் பொருளியலில் ஓரளவுக்கு ஏறுமுகத்தைக் காணமுடியும் என்று நிதியம் குறிப்பிட்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்