"ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தடையின்றிச் செல்வது முக்கியம்"
வாசிப்புநேரம் -
படம்: MFA
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையின்றிச் செல்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் முடிவில் அவர் அதனைத் தெரிவித்தார்.
டாக்டர் பாலகிருஷ்ணன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான், சவுதி அரேபியா, கத்தார் ஆகியவற்றுக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவர் ஆசியான் அமைப்புக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் பற்றிக் கலந்துபேசினார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் இழுபறியில் இருக்கும் வேளையில் டாக்டர் பாலகிருஷ்ணனின் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
வளைகுடா நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் நீண்டகால உறவுகளை அப்போது அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட வட்டார விவகாரங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

ஆதாரம் : Mediacorp Seithi