Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எங்கிருந்தாலும் நல்லதைச் செய்வதும் சமூகத்துக்குக் கொடுப்பதும் முக்கியம்: அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -

அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் சிறிய நாடுகளோடு நல்லுறவு கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

அனைத்துலக ஒழுங்கு சீரற்றுப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அதைத் தற்காக்கச் சிறிய நாடுகளுக்கு இடையிலான நட்பு உதவும் என்றார் அவர். 

பெல்ஜியத்தில் இருக்கும் திரு தர்மன் தலைநகர் பிரசல்சில் சிங்கப்பூரர்களைச் சந்தித்தார். 

எங்கிருந்தாலும் நல்லதைச் செய்வதும் சமூகத்துக்குக் கொடுப்பதும் முக்கியம் என்று அதிபர் சொன்னார். 

சிங்கப்பூர் உலக நாடுகளிடம் நட்பை வளர்ப்பதும், நம்பிக்கைக்குரிய நண்பனாக இருப்பதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். 

வலிமையானவர் சொல்வதே சரி என்றோ, சக்திவாய்ந்த நாடே உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றோ ஆகிவிடக்கூடாது என்று திரு தர்மன் குறிப்பிட்டார். 

இனங்களுக்கு இடையிலான இணக்கத்தைக் காப்பதிலும் காலத்துக்கு ஏற்ப அதை வளர்ப்பதிலும் சிங்கப்பூரின் பங்கு அளப்பரியது என்றார் அதிபர். 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்