Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நாடாளுமன்ற நாயகர் நியமனம்"

வாசிப்புநேரம் -
"நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நாடாளுமன்ற நாயகர் நியமனம்"

YouTube/MDDI Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் திரு சியா கியன் பெங் மீண்டும் நாடாளுமன்ற நாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

திரு சியாவை வாழ்த்திப் பேசிய உரையில் குமாரி இந்திராணி ராஜா அவ்வாறு கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக அரசியல் கட்டமைப்பு மாறிவருவதை அவர் சுட்டிக்காட்டினார். 

அந்தப் பாதை அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டு வந்ததாகத் திருவாட்டி இந்திராணி ராஜா சொன்னார். 

இப்போது உலகம் மாற்றத்தில் இருக்கிறது என்றும் புதிய ஒழுங்குப்பாதை இன்னும் நிலைநாட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பின்னணியில் நாடாளுமன்றம், சட்டங்களை இயற்றும், கொள்கைகளை விவாதிக்கும், சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்... முடிவுகளை எடுக்கும் என்றார் அவைத் தலைவர் இந்திராணி ராஜா. 

அவ்வகையில் திரு சியா நாடாளுமன்ற விவகாரங்களைத் தொடர்ந்து நியாயமாக வழிநடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்