Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தட்டம்மைக்கு எதிராக பாலர்பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வாசிப்புநேரம் -
தட்டம்மைக்கு எதிராக பாலர்பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
படம்: Envato Elements
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தட்டம்மைக்கு எதிராக பாலர்பள்ளிகளும் மருத்துவமனைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

உள்ளூரிலும் உலக அளவிலும் தட்டம்மைக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தடிப்பு, காய்ச்சல் ஆகியவற்றுக்குத் தினசரிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

தடுப்பூசிகள் நேரத்தோடு போடப்பட்டுள்ளனவா என்பதும் ஆராயப்படுகிறது.

பாலர்பள்ளிகளை நடத்தும் NTUC First Campus பிள்ளைகளுக்கும் ஊழியர்களுக்கும் மேம்பட்ட சுகாதாரப் பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்டோர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவதாகவும் அது சொன்னது.

St Luke's மருத்துவமனை நோயாளிகளிடமும் ஊழியர்களிடமும் தட்டம்மைக்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதைச் சோதிக்கிறது.

தடுப்பூசிப் பதிவுகளையும் அது மறுஆய்வு செய்கிறது.

தட்டமையால் பாதிக்கப்படக்கூடியோர் பற்றி முன்கூட்டியே கண்டறிந்து தெரிவிக்கும்படியும் ஊழியர்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்