Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வழக்கநிலைக்குத் திரும்பும் போக்குவரத்து - அதிகரிக்கும் ERP கட்டணங்கள்

வாசிப்புநேரம் -
வழக்கநிலைக்குத் திரும்பும் போக்குவரத்து - அதிகரிக்கும் ERP கட்டணங்கள்

Mediacorp

சிங்கப்பூரில் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்புவதை அடுத்து, மின்னியல் சாலைக் (ERP) கட்டணங்கள்)அதிகரிக்கின்றன.

பல விரைவுச்சாலைகளில் மே, ஜூன் மாதங்களில் கட்டணங்கள் ஒரு வெள்ளி அதிகரிக்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த விவரங்களை வெளியிட்டது.

வேலையிடங்களுக்கு மக்கள் திரும்புவதை அடுத்து, போக்குவரத்து வழக்கநிலையை எட்டுவதாக ஆணையம் சொன்னது.

மே 30ஆம் தேதி முதல் 7 இடங்களில் 13 நேரங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் அதிகரிக்கும்.

 

எதிர்வரும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு 3 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டண அதிகரிப்பு ஜூன் 27ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

மேலும் 5 இடங்களில் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது கட்டணம் ஒரு வெள்ளி குறைக்கப்படும்.

போக்குவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, மின்னியல் சாலைக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவேண்டுமா என்பது ஆராயப்படும் என்று ஆணையம் சொன்னது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்