Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூரில் அதிகரித்திருக்கும் திருட்டுச் சம்பவங்கள் -"விலைவாசி உயர்வு, ஆடம்பர மோகம் - பல காரணங்கள் இருக்கலாம்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கடை திருட்டுச் சம்பவங்கள் 20 விழுக்காடு அதிகரித்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

2022 - 3,244 சம்பவங்கள்
2021 - 2,652 சம்பவங்கள்

ஒட்டுமொத்தக் குற்றச்செயல்களில் அது 16 விழுக்காட்டுக்கு மேல் பங்கு வகித்ததாகக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

திருடப்பட்ட பொருள்களில் பெரும்பாலானவை உணவு, உடை, மது, அழகுப் பராமரிப்பு பொருள்கள்.

கண்காணிப்புக் கேமரா மூலம் குற்றவாளிகள் பலர் பிடிபட்டதாகக் காவல்துறை கூறியது.

சமூகரீதியாக முன்வைக்கப்படும் காரணங்கள்

சமூக ஆலோசகர் பிரெஷிளாவிடம் பேசியது 'செய்தி'. அவர் முன்வைத்த சில காரணங்கள்...
  • பிறருடன் ஒப்பிட்டு, ஒரு பொருள் தனக்கு வேண்டும் என நினைத்துத் திருடலாம்.
  • சிலர் பணச் சிக்கல்களைச் சமாளிக்க இது போன்ற குறுக்கு வழிகளை நாடக்கூடும்.
  • திருடுபவர்களின் பின்னணியைப் பார்த்தால் பெரும்பாலானோர் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பர்.
  • அதிகரிக்கும் விலைவாசி
  • அழகுப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் அது பலருக்குக் கட்டுப்படியாகாமல் இருக்கலாம். அதன் மீதுள்ள ஆசை சிலரைத் திருடத் தூண்டும்.
  • தனிமை, கவனத்தை ஈர்க்கும் போக்கு
  • ஆடம்பரப் பொருள்கள் மீதுள்ள மோகம்
"அதிகரிக்கும் விலைவாசி - ஒரு முக்கிய காரணம்"

அண்மையில் குழந்தைகளுக்கான பால் மாவு களவாடப்படும் போக்கு அதிகரித்துள்ளது.

அதனைத் திருடுபவர்களில் பெரும்பாலானோருக்கு இளம் பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் அவற்றை மலிவான விலையில் விற்கப் பார்க்கின்றனர்.

இதை வாங்குபவர்களும் உள்ளனர். இதற்கென ஒரு சந்தை இருந்தால், அது அவர்களை மேலும் திருட ஊக்குவிக்கும் என்றார் பிரெஷிளா.

"வழக்கநிலை திரும்புவதால் அதிகரிப்பு - காவல்துறை"

COVID-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாலும் வழக்கநிலை திரும்புவதாலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்ததாகக் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது.

ஒருவர் திருட்டுக்கு ஆளாகாமல் இருக்க உற்றார் உறவினர் பெரும் பங்கு வகிப்பதாக அது கூறியது.

அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதைத் தடுக்க வகை செய்ய முடியும் என்றது அது.

குற்றங்களைக் காவல்துறையிடம் உடனுக்குடன் புகார் செய்யுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்