நடிகர் மாதவனைக் கவர்ந்த சிங்கப்பூரின் “Guardians of the Murukku” காணொளி
வாசிப்புநேரம் -

(படம்: Wikimedia Commons)
அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கம் தீபாவளிக்காக “Guardians of the Murukku” எனும் காணொளியைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.
தீபாவளியையும் முறுக்கையும் பற்றிய காணொளியைக் கண்ட இந்திய நடிகர் மாதவன் அதனைப் பாராட்டித் தமது Instagram பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தீபாவளிக்கு முந்தைய நாளன்று முருகேசனும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்த முறுக்கு தீர்ந்துவிட்டதை உணர்ந்தனர்.
முறுக்கு இல்லாமல் தீபாவளியைக் கொண்டாட முடியாது என்று கூறி அதனை எப்படியாவது வாங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எதுவும் கைகூடவில்லை.
மறுநாள் தீபாவளி...என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போன நிலையில் இருந்தபோது....
வேறு மதங்களைச் சேர்ந்த ரூபினாவும் கூவும் பல அண்டை வீட்டுக்காரர்களும் ஒன்றுகூடிப் பல வகை முறுக்குகளை முறுகேசனின் குடும்பத்தினருக்குத் தருவதைக் காணொளியில் பார்க்கலாம்.
முறுகேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.
54 ஆண்டுகள் கழித்தும் அவர்களது நட்பு தொடர்கிறது. முறுக்கின் மீது அவர்கள் வைத்திருக்கும் பிரியம் சிறிதும் குறையவில்லை.
இதோ காணுங்கள் காணொளியை...

ஆதாரம் : Others