Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளைப் புறக்கணியுங்கள்': இந்தியாவின் காங்கிரஸ் கட்சி

இந்தியப் பொதுத் தேர்தலின் கருத்துக்கணிப்புகளைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

வாசிப்புநேரம் -

இந்தியப் பொதுத் தேர்தலின் கருத்துக்கணிப்புகளைப் புறக்கணிக்குமாறு முக்கிய எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கருத்துக்கணிப்புகள் குறித்து சோர்ந்துவிட வேண்டாம் என்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர் கட்சியினரிடம் கூறினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 280க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

அவ்வாறு நடந்தால் அது பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாம் தவணையை உறுதிப்படுத்தும்.

கருத்துக்கணிப்பில் எதிர்பாராத சில முன்னுரைப்புகளும் இடம்பெற்றிருந்தன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்