Skip to main content
கத்தியால் கழுத்தில் வெட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கத்தியால் கழுத்தில் வெட்டு - இந்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
கத்தியால் கழுத்தில் வெட்டு - இந்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

படம்: கோப்புப் படம்/State Courts in Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 31 Aug 2026 03:46PM புதுப்பிப்பு : 31 Aug 2026 04:09PM
துவாஸில் 29 வயது ஆடவரைக் கொலை செய்ததாக 25 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த முருகநாதன் கதிர்வேல், திரு ராஜ் மஹேஷ்குமாரைக் கழுத்தில் கத்தியால் வெட்டிக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது,

நேற்று முன்தினம் (29 ஆகஸ்ட்) இரவு 10 மணியளவில் துவாஸ் சவுத் அவென்யூ 9இல் சம்பவம் நடந்தது.

அன்றிரவு சுமார் பத்தே கால் மணிக்கு அது குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை முன்னதாகக் கூறியது.

காவல்துறையினர் அங்கு சென்றபோது திரு ராஜ் சாலையில் அசைவின்றிக் கிடந்தார்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 4 மணி நேரத்திற்குள் கதிர்வேல் கைது செய்யப்பட்டார்.

இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) கதிர்வேல் நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்