Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கூடுதல் பொறுப்புகள், நிதி நிலைமை, வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறோம் - இந்திய இளையர்கள்

கூடுதல் பொறுப்புகள், நிதி நிலைமை, வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறோம் - இந்திய இளையர்கள்

வாசிப்புநேரம் -

கூடுதல் பொறுப்புகள், நிதி நிலைமை, வாழ்க்கை முறை, வீடு கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால்தான் திருமணத்தைத் தள்ளிப் போடுவதாகவும், மணமுடிக்காமல் இருப்பதாகவும் சில இந்திய இளையர்கள் "செய்தி"யிடம் கூறினர்.

கடந்த 10 ஆண்டுகளில், சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களில் திருமணமானோரின் விகிதம் சற்றுக் குறைந்துள்ளது.

30-39 வயதுடைய இந்திய ஆண்கள் இடையே திருமணமாகாதோர் விகிதம் கிட்டத்தட்ட 8 விழுக்காடு கூடியுள்ளது.

--2010: 13.6 விழுக்காடு
--2020: 21.8 விழுக்காடாக அதிகரிப்பு

30-39 வயதுடைய பெண்கள் பிரிவிலும் திருமணமாகாதோர் விகிதம் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

--2010: 7.4 விழுக்காடு
--2020: 15.3 விழுக்காடாக அதிகரிப்பு

இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட என்ன காரணம் என்று 'செய்தி' சிலரிடம் கேட்டது.

கல்விக்காக வாங்கிய கடனை அண்மையில் தான் செலுத்தி முடித்தேன். நல்ல வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் அதற்கான சேமிப்பு சற்றுக் குறைவாகவே உள்ளது.

தற்போது COVID-19 நோய்த்தொற்றுச் சூழலால் வேலையும் நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் திருமணத்தை எண்ணிப் பார்க்கவில்லை 

- அருண் குமார் பிரபாகரன் (33)

வெற்றிகரமாகத் தொழில் நடக்கும் வரை திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

திருமணம் செய்து கொண்டால் கூடுதலான பொறுப்புகள் இருக்கும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்படும், அதனால் தொழிலில் கவனம் சிதறக்கூடும் 

இப்போது முழு கவனமும் தொழில் வளர்ச்சியை நோக்கி உள்ளதால் திருமணத்தை எதிர்பார்க்கவில்லை.

- கவித்தேஷ் குமார் பாலி (32)

நான் 35 வயதில் திருமணம் செய்து கொண்டேன், BTO கிடைக்க சுமார் 3 ஆண்டு ஆனதே நான் அந்த வயதில் திருமணம் செய்ய முக்கியக் காரணம்.

எனது குடும்பம் பெரிய குடும்பம் அதனால் புதிய வீட்டில் வாழத்தான் எனக்கு எண்ணம் இருந்தது.

குழந்தை பிறந்தால் அதற்கான செலவுகள் என நிதி தொடர்பான சிந்தனைகளும் திருமணம் செய்வதைத் தாமதமாக்கியது. 

- பாண்டியன் (43)

என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்குத் தடையாக இருப்பது வாழ்க்கை முறை தான்.

தனியாக இருக்கும் போது அதிக சுதந்திரம் இருக்கும். ஆனால் திருமணம் செய்து கொண்டால் கூடுதல் பொறுப்புகள் வரும்.

வாழ்க்கையில் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று ஆசைகள் இருக்கும். அதனால் திருமணம் செய்யக் காலமும் தள்ளிக்கொண்டே போகும்.

திருமணம் தனிநபர்கள் விருப்பம். என்னைப் பொறுத்தவரை விரைவில் செய்துகொள்வது நல்லது.

- முகமது ஜமிர் (22)

30 வயதுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள எனது விருப்பம்.

ஆனால் வேலையில் நன்றாக செயல்பட வேண்டும், நிதி நிலைமையில் நன்றாக இருக்க வேண்டும், கடன் இருக்கக்கூடாது போன்றவற்றில் அதிக கவனம் இருக்கும். அதனால் திருமணம் செய்து கொள்ளும் காலம் அதைப் பொறுத்து மாறும். 

- ருத்ரா (23)

நான் 30 வயதில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

எனக்கான நிதி நிலைமை சரியாக இருக்க வேண்டும், நல்ல வீடு வாங்க வேண்டும், புதிய வாகனம் கூட வாங்கத் திட்டமுள்ளது, அந்த நேரம் COVID-19, பொருளாதார நெருக்கடி எழும் போது திருமணத் திட்டம் மாறக்கூடும் என்கிறார் 24 வயது மோஷிக் சீத்லோ   

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்