Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இந்தோனேசியா விருப்பம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இந்தோனேசியா விருப்பம்
படம்: CNA
இந்தோனேசியா சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறது.

முதலீடு, மூலப்பொருள் அமைச்சர் ரோசான் பெர்க்காசா ருஸ்லானி (Rosan Perkasa Roeslani) அதனைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தோனேசியா அதன் பொருளாதார இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

சேனல் நியூஸ் ஏஷியா (Channel News Asia) மாநாட்டில் அவர் பேசினார்.

அந்த மாநாடு இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் நடைபெற்றது.

அது 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதன்முறை.

இந்தப் புது யுகத்தில் முதலீடுகளையும் புத்தாக்கத்தையும் எப்படிக் கையாள்வது என்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய மாநாடு பிற்பகல் இரண்டரை மணிவரை நடந்தது.

தெமாசெக் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி, மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான கஸானாவின் தலைமை முதலீட்டு அதிகாரி உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்