திருமணமான சிங்கப்பூரரை மணமுடித்த பணிப்பெண்ணுக்குச் சிறை
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: Jeremy Long)
இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்குச் சென்று ஏற்கனவே திருமணமான சிங்கப்பூர் ஆடவரை மணமுடித்த பணிப்பெண்ணுக்கு 2 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 50 வயது கொமாரியா (Komariah) பாத்தாமில் வீட்டுக் கடன் பெறுவதற்காக அவ்வாறு செய்தார்.
அந்தச் சட்டவிரோதத் திருமணம் குறித்து அறிந்த மனிதவள அமைச்சு, காவல்துறையிடம் புகார் அளித்தது.
கொமாரியா திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரரான 61 வயது லோ கொக் பெங்கிற்குச் (Low Kok Peng) சென்ற மாதம் இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லோவிற்கு ஏற்கனவே சிங்கப்பூரில் 55 வயதில் மனைவி இருக்கிறார்.
இருதார திருமணத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு குற்றச்சாட்டை கொமாரியா ஒப்புக்கொண்டார்.
அனுமதியின்றி சிங்கப்பூரரைத் திருமணம் செய்து வேலை அனுமதி நிபந்தனையை மீறிய ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
கொமாரியாவிற்கு 12 மாதம்வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : CNA