Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குழந்தைக்கு வலுக்கட்டாயமாகப் பாலூட்டிய முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் குழந்தைக்கு வலுக்கட்டாயமாகப் பாலூட்டிய முன்னாள் ஆசிரியருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 37 வயதுப் பெண் ஒரு பாலர் பள்ளியின் சிசுப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்தார். 

அங்கு இரண்டு வயதுக்குட்பட்ட சுமார் 10 பிள்ளைகளை அவர் பராமரித்துவந்தார். 

பாதிக்கப்பட்ட குழந்தையை 2024இல் அந்தப் பெண் துன்புறுத்தினார்.

குழந்தை தானாகப் பால் குடிப்பதை நிறுத்தியதால் அவர் வலுக்கட்டாயமாகப் பாலூட்டினார்.

குழந்தை அழுது அடம் பிடித்தபோதும் அவர் ஓயவில்லை.

ஒரு கட்டத்தில் குழந்தை வாந்தியெடுத்தது.

குழந்தையை அடித்த அந்தப் பெண் அதன் கையைப் பிடித்து இழுத்துப் பிள்ளையைத் தூக்கினார்.

அடையாளம் தெரியாத ஒருவர் பாலர்பள்ளியில் துன்புறுத்தல் நடப்பதாகப் புகார் கொடுத்தார்.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பார்த்தபோது பெண்ணின் செயல் அம்பலமானது.

பெண்ணும் மற்றோர் ஊழியரும் பிற குழந்தைகளைத் துன்புறுத்தியதும் தெரியவந்தது.

இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்