போதைப்பொருள் தாக்கம் - தவறான தகவல்கள் அதிகரித்துள்ளன: அமைச்சர் தியோ
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Marcus Mark Ramos)
போதைப்பொருள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துத் தவறான தகவல்கள் அதிகரித்துவருவதாக இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருக்கிறார்.
அதற்கு எதிரான போராட்டத்தில் சமூகம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
உலக அளவில் போதைப்பொருள் நிலவரம் மோசமாகிவரும் சூழலில் திருமதி தியோவின் கருத்து வந்துள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் குறித்துச் சில நாடுகள் கூடுதல் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்கின்றன.
கஞ்சாப் புழக்கத்தைச் சட்ட ரீதியாக அனுமதிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க ஆய்வொன்று காட்டுகிறது.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஆசிய-பசிபிக் கருத்தரங்கில் திருமதி தியோ பேசினார்.
போதைப்பொருள்களைத் தடுப்பதில் பின்பற்றப்படும் ஆகச் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் தலைவர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்கின்றனர்.
போதைப்பொருள்களற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கங்களும் அரசாங்கம்-சாரா அமைப்புகளும் சேர்ந்து செயலாற்றுவது முக்கியம் என்று அமைச்சர் தியோ வலியுறுத்தினார்.

ஆதாரம் : Mediacorp Seithi