Skip to main content
காமன்வெல்த் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காமன்வெல்த் போட்டி - 100 மீட்டர் இறுதிச்சுற்றைத் தவறவிட்டார் சாந்தி பெரேரா

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் போட்டி - 100 மீட்டர் இறுதிச்சுற்றைத் தவறவிட்டார் சாந்தி பெரேரா

(படம்: Sport Excellence Singapore/Andy Chua)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காமன்வெல்த் போட்டியில் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா 100 மீட்டருக்கான இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

அரையிறுதிச் சுற்றில் அவர் 5ஆம் இடத்தில் ஓடி முடித்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.40 விநாடி.

அரையிறுதிச் சுற்றில் போட்டியிட்ட 24 வீராங்கனைகளில் அவர் 14ஆவது இடத்தைப் பிடித்தார்.

போட்டி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இதுபோன்ற குளிரும் மழையும் நிறைந்த சூழலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை," என்றார்.

இன்னும் வேகமாக ஓடியிருக்கலாம். இருந்தாலும் அரையிறுதிச் சுற்று வரை தகுதிபெற்றது பெருமிதமாக உள்ளது என்றும் சொன்னார்.

அவர் அடுத்து 200 மீட்டருக்கான போட்டியில் களமிறங்கவுள்ளார்.

ஆசியப் போட்டிகளில் 200 மீட்டர் பந்தயத்தின் நடப்பு வெற்றியாளர் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்