Skip to main content
"மத்திய கிழக்கில் பூசல் தொடர்ந்தாலும் வாய்ப்பு உள்ளது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"மத்திய கிழக்கில் பூசல் தொடர்ந்தாலும் வாய்ப்பு உள்ளது"

வாசிப்புநேரம் -
"மத்திய கிழக்கில் பூசல் தொடர்ந்தாலும் வாய்ப்பு உள்ளது"

படம்: Temasek

தெமாசெக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings) தலைவர்  தியோ சீ ஹியென் (Teo Chee Hean), மத்திய கிழக்கில் பூசல்கள் தொடர்ந்தாலும், அங்கு வாய்ப்புகள் உள்ளன என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் அலுவலகம் ஒன்றைத் திறப்பது குறித்து நிறுவனம் பரிசீலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் வட்டாரத்தில் எந்த இடத்தில் அலுவலகம் திறக்கப்படும் என்பதை அவர் கூறவில்லை.

திரு தியோ தெமாசெக் ஹோல்டிங்ஸ் தலைவராகச் சென்ற அக்டோபரில் பொறுப்பேற்ற பிறகு அளித்த முதல் நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

வர்த்தகப் போர், உலகளாவிய பூசல்கள் முதலியவற்றால், முதலீட்டு அணுகுமுறை வெகுவாய் மாறியுள்ளதாய் அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவைத் துறையில் தாம் வகித்த பதவிகள் புதிய பொறுப்பைக் கையாள உதவுவதாகவும் திரு தியோ கூறினார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்