இலவச காலை ரயில் பயணம் - தற்காலிகமா? நிரந்தரமா?
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் காலை உச்சநேரத்துக்கு முந்திய இலவசப் பயணத் திட்டம் சோதிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பாதையிலும், செங்காங்-பொங்கோல் LRT பாதையிலும் இப்போது அது நடப்பில் உள்ளது.
உச்சநேரத்தில் கூட்டநெரிசலைக் குறைப்பது நோக்கம் என்று போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) கூறினார்.
இலவசப் பயணத் திட்டத்தை நிரந்தரமாகக் கொண்டுவர எண்ணம் உண்டா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் எழுத்துபூர்வ பதில் தந்தார்.
காலை உச்ச நேரத்தில் ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தைக் குறைக்க உச்சநேரத்துக்கு முன்பு செல்வோருக்கு இலவசப் பயணம் வழங்கப்படுகிறது.
இதற்குமுன் இதேபோன்ற இலவசப் பயணம் திட்டம் 2013ஆம் ஆண்டு அறிமுகமானது.
அப்போது பயணிகளில் சுமார் 7 விழுக்காட்டினர் காலை உச்சநேரத்தைத் தவிர்த்து இலவசப் பயண நேரத்துக்கு மாறினர்.
இப்போதும் அதே இலக்கை அடைய அரசாங்கம் எண்ணுகிறது.
இது அரசாங்கத்தின் நிதி உதவியால் இயங்கும் திட்டம்.
ஓராண்டுக்குப் பிறகு திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதா இல்லையா என்று யோசிக்கப்படும் என்றார் அமைச்சர்.

ஆதாரம் : Others