Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கசிவுப் புகார்களுக்குத் தீர்வு? குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு

வாசிப்புநேரம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் மாடிகளுக்கு இடையே நீர்க் கசிவு தொடர்பில் சராசரியாக 17,000 கருத்துகளைப் பெறுவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சம்பவங்களில் வீட்டு  உரிமையாளர்கள் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவிடுவர்.

பொதுவாக 2 முதல் 4 மாதங்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. அதைத் தீர்த்து வைக்க கசிவு எங்கிருந்து ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து சீர் செய்ய வேண்டும் என்றார் திரு சீ.

அதற்கு வீடுகளுக்குப் பலமுறை செல்ல வேண்டியிருக்கலாம்.

பிரச்சினையை விரைவில் தீர்க்க இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, 10 கசிவுச் சம்பவங்களைத் தீர்க்க 4 மாதங்களுக்கு மேலானது.

மேல் வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைக்காதது அதற்குக் காரணம் என்று திரு சீ கூறினார்.

அவர்கள் மீது கழகம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்