செம்பவாங் குழுத் தொகுதி - பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன
வாசிப்புநேரம் -
படம்: Facebook/Ong Ye Kung
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) செம்பவாங் குழுத் தொகுதியில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்வார் என்பது பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இருந்த ஏற்பாட்டில் குறைந்த அளவில் மாற்றத்தைச் செய்வதே வழக்கம் என்று Facebook பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் முன்னைய கான்பரா (Canberra) வட்டாரத்தில் பெரிய முன்னேற்றமும் மக்கள் தொகையில் பெரிய வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
அந்த மாற்றங்களைக் கவனிக்க தனியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை என்பதால் முன்னைய கான்பரா வட்டாரத்தில் இருந்து புதிய பகுதி பிரிக்கப்பட்டு அதற்கு Naval Base என்று பெயரிடப்படும் என்றார் அமைச்சர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் இங் ஷி சுவேனையும் (Ng Shi Xuan) அந்த வட்டாரத்தைக் கவனிப்பார்.
அதிக மாற்றமில்லாத உட்லண்ட்ஸ் (Woodlands), அட்மிரல்டி (Admiralty) பகுதிகளைத் திருவாட்டி மரியம் ஜாபர் (Mariam Jaafar), திரு விக்ரம் நாயர் ஆகியோர் கவனிப்பர் என்றார் திரு ஓங்.

ஆதாரம் : Others