Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்தோர் துடிப்புடன், ஆரோக்கியமாக இருக்கத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்: லாரன்ஸ் வோங்

வாசிப்புநேரம் -
இன்று அனைத்துலக மூத்தோர் தினம்.

அது குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் இவ்வாண்டு தேசிய தினக் கூட்ட உரையில் 78 வயது திருவாட்டி லியாவ் பற்றிப் பேசியிருந்தார்.

அவரைக் குறித்த காணொளியையும் திரு. வோங் இன்று Facebookஇல் பகிர்ந்தார்.

"முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த பலரைப் போன்று திருவாட்டி லியாவ் தற்சார்பு, மீள்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். அவர்
உடற்பயிற்சிகளை வழிநடத்தி, சமூக ஒன்றுகூடல்களுக்கு ஏற்பாடு செய்து, அண்டை வீட்டாரிடையே உறவை வளர்க்கத் துணைபுரிகிறார். மூத்தோர் துடிப்புடன், ஆரோக்கியமாக வாழத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்," என்று திரு. வோங் குறிப்பிட்டார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்