Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

இன்று அனைத்துலக யோகா தினம் - யோகாவைப் பற்றி இளையர்கள் கூறுவது?

வாசிப்புநேரம் -

இன்று அனைத்துலக யோகா தினம்!

இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தியான முறையே யோகா கலை. 

இன்று இக்கலை உலகம் முழுவதும் கற்றுத்தரப்படுகிறது.

பழைமையான இந்தக் கலை இன்றும் பலரிடையே குறிப்பாக இளையர்களிடையே பிரபலமாகவே உள்ளது. 

யோகாவின்மீது பெரும் நாட்டம் கொண்டுள்ள 3 இளையர்களிடம் பேசியது செய்தி.

நான் ஓர் இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர். என் பள்ளிதான் எனக்கு யோகாவைக் கற்றுத் தருகிறது. யோகாவைக் கற்பதால் உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் நான் பெற்றுள்ளேன். மேலும்,  தசைகளை வலுப்படுத்தி நடனத்திற்குத் தேவையான உடல் வலிமையைப் பெறுவதற்கும் யோகா உதவுகிறது

என்றார் மீனாள்.

நான் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு யோகா பயிற்சி செய்யத் தொடங்கினேன். இது என் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிக்க உதவியது. 

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில்கூட யோகா பயிற்சியைத் தொடரும் ஆர்வம் என்னிடம் உண்டு. யோகா கலை எனக்கு மன அமைதியையும் தருகிறது. அதோடு, என் மனத்தைத் தெளிவுபடுத்தவும் அது உதவுகிறது.

என்றார் பிரித்திக்கா

நான் மிகுந்த மனவுளைச்சலிலும் மனச்சோர்விலும் துவண்டுபோயிருந்த காலத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். 

மனத்தை நிலைப்படுத்த உதவிய யோகா கலை, என்னிடத்தில் இருந்த சுயமரியாதையையும் அதிகரிக்க உதவியது.  

நான் சுமார் நான்கு ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

தினமும் காலையில் எழுந்தவுடன் யோகா செய்வது என் வழக்கம்."
என்றார் சக்தி.

மூவரும் யோகா கலை தங்களின் பிரச்சினைகளை நீக்க உதவியதாகவும் மன நிம்மதியை அளிப்பதாகவும் கூறினர். 

தனிநபரிடத்தில் இருக்கும் தன்னைப் பற்றிய சுயவிழிப்புணர்வை யோகா கலை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைமுறையில் அது மிக முக்கியமானது என்பதால் யோகா கலையில் ஈடுபடுவதை இளையர்களில் பலரும் விரும்புவதாக நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa