Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

LASALLE மாணவர்களுக்கு மீடியாகார்ப்பில் கூடுதல் பயில்நிலைப் பயிற்சி வாய்ப்புகள்

வாசிப்புநேரம் -
லாசேல் (LASALLE) கலைக்கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் ஆவணப்படத் தயாரிப்புப் பயிலரங்குகள், படைப்பாற்றல் திட்டக் கூட்டு முயற்சிகள், மீடியாகார்ப் நிறுவனத்தில் கூடுதல் பயில்நிலைப் பயிற்சி வாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த சில ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

மீடியாகார்ப் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட புதிய உடன்பாடு அதற்கு வகைசெய்கிறது.

விரிவுபடுத்தப்பட்ட அந்த உடன்பாட்டில் மேலும் அதிகமான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

இதற்கு முன்னதாக நடனத்துறை, நாடகத்துறை மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

மீடியாகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லோக் கெங் (Tham Loke Kheng) மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில் அவர்களின் புதிய கண்ணோட்டங்கள் மூலம் தாங்களும் பயனடைவதாகத் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்